Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நொண்டி முனியாண்டி கோயில்

Nondi Muniyāndi Temple

கோயிலின் வேறு பெயர்

நொண்டி முனியாண்டி, நொண்டி வீரன், நொண்டி கருப்பசாமி என பல பெயர்களில் இந்த நொண்டி சாமி அறியப்படுகிறது.


அமைவிடம்

இரணியம் ஊரில் உள்ள புளியமரத்தின் அடியில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

நொண்டி முனியாண்டி


ஊர்

இரணியம்

மாவட்டம்

மதுரை

தல மரம்
புளியமரம்
கோயில் குளம்/ஆறு
இரணியம் கண்மாய்
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதத்தில் நொண்டி முனியாண்டி கோயில் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டப்படுகிறது. அன்றிலிருந்து மூன்றாவதாக வரும் செவ்வாய்க்கிழமையில் திருவிழாவானது முடிவு பெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இந்த சாமிக்காக கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி குதிரை எடுப்பு விழா நடத்தி சாமியை குளிர்விக்கின்றனர். திருவிழா நடத்தப்படும் காலங்களில் முனியாண்டி கோயிலில் கும்மியும், முளைப்பாரியும் என அந்த 15 நாட்களுமே விழாக்கோலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
நொண்டி முனியாண்டி சிற்பம் அமைந்துள்ள பீடத்தில் ஒரு தமிழ் கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டில், சுவாமிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் ஏற பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
சிற்பங்கள்
நொண்டி முனியாண்டியின் திருவுருவ சிலைக்கு அருகில் விநாயகர் சிலை அமைந்துள்ளது.
கோயில் அமைப்பு
பெரிய புளியமரத்தின் அடியில் நொண்டி முனியாண்டி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி கோயில் அமைப்பைக் கொண்ட கூரையில்லாக் கோயில் ஆகும்.
சுருக்கம்
இரணியம் கிராமத்தில் உள்ள மிக முக்கிய காவல் தெய்வங்களாக அய்யனார் மற்றும் நொண்டி முனியாண்டி விளங்குகின்றனர். நொண்டி முனியாண்டியின் திருவுருவச் சிலை ஒரு பெரிய புளியமரத்தின் கீழ் அமைந்துள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழாவானது நடைபெறுகிறது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழாவை எடுத்து நடத்துகின்றன.

கூடுதல் விவரங்கள்
நொண்டி முனியாண்டி 21 காவல் தெய்வங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் முக்கிய பலம் பொருந்திய வீரராகவும் கருதப்படுகிறார். ’நொண்டி’ என்பது அவரது உருவத்தை குறிப்பதாக உள்ளது. ஏனெனில் இவர், சிற்பத்தில் தன் ஒரு காலை மடக்கியும் மறுகாலைத் தரையில் பதித்தபடியும், மண்டியிட்ட கோலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வூர் மக்கள் இவரை, வேண்டியதை அள்ளிக் கொடுக்கும் கடவுளாகவும் கருதுகின்றனர். பிள்ளை வரம் மற்றும் திருமண வரம் வேண்டுவோர் கோயில் மரத்தில் மணி கட்டுவது வழக்கம். நொண்டி முனியாண்டி அமைந்துள்ள புளிய மரத்திலிருந்து இலைகளையும், அதில் காய்க்கும் புளியங்காய்களையும் மக்கள் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தும் கடவுளுக்கு சொந்தம் என்று அவர்களால் நம்பப்படுகிறது. பொதுவாக அரசமரமும் வேப்பமரமும் இணைந்த இடத்தில் பிள்ளையார் சந்நிதி அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதேப் போல இங்கும் ஒரு சிறிய சந்நிதி எழுப்பப்பட்டு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

செல்லும் வழி
இரணியம் ஊர் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுந்தர்ராஜன் பட்டி பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
புதூர், கடச்சனேந்தல்
புகைப்படங்கள்

ஜென்சி

ஜென்சி

ஜென்சி

ஜென்சி

ஜென்சி