வாரம் இரு நாட்கள் கோயில் திறக்கப்பட்டுப் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
விநாயகர் சதுர்த்தி அன்று சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
விநாயகர், முருகர், நவக்கிரகங்கள்.
கோயில் அமைப்பு
கருவறை, முன்மண்டபம், முருகர், நவக்கிரகங்கள் சந்நிதி உள்ளன.
கூடுதல் விவரங்கள்
கோயில் கருவறையில் மூலவரான சித்தி விநாயகர், பீடத்தின் மேல் அமர்ந்து அருள் பாலிக்கிறார். கருவறை நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு துவார பாலகர்கள் கதை மற்றும் பிற ஆயுதங்கள் ஏந்தியவாறு நிற்கின்றனர். கருவறைக்கு முன் உள்ள மண்டபப் பகுதியில் பலிபீடம் மற்றும் விநாயகரின் வாகனமான மூஷிகம் எனப்படும் எலி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவாயிலில் முகப்புடன் கூடிய வளைவு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுப் பகுதியில் பீடத்தின் மேல் நவக்கிரகங்களும் முருகன் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் ஊர் மக்கள் அனைவருக்கும் பொதுவான கோயிலாகத் திகழ்கிறது.
Worship Timings
The temple is open for pujas twice a week. Special pujas are held on Ganesa Chaturthi.
Inscription / Copper
No.
Sculptures
Lord Ganesha, Lord Murugan, and the nine planets.
Architecture
A Sanctum, a Mukha Maṇḍap, a shrine of Lord Muruga and the nine planets.
Additional Information
The idol of the god Siddhi Vinayaka is placed on a pedestal in the temple's sanctum sanctorum. Two Dvarapalakas are standing with mace and other weapons on either side of the entry to the sanctum sanctorum. An altar and a rat known as Mushika, Lord Ganesa's vahana or vehicle, are found at the Mukhamandapa in front of the sanctum sanctorum. At the temple's entrance, a façade arch is erected. The Navagrahas are positioned on a pedestal in the circumambulatory area, which also features a shrine dedicated to Muruga. All the villagers worship in this temple without any discrimination.