கிடாய்வெட்டுதல், குதிரையெடுப்பு, கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல் போன்ற வழிபாட்டு சடங்குகள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
பூதகனங்கள், நாய், மற்றும் பிற காவல்தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
கழுவம்பட்டி கோயில் கருப்புசாமி, வளநாட்டு கருப்புசாமி என்றும் அழைக்கப்படுகிறார். பலகாலம் முன்பு கருப்புசாமி கிழக்கிலிருந்து பள்ளபெஞ்சகோயில்/பள்ளப்பன்சாவடி வழியாக நாயுடன் வேட்டையாடி வரும்பொழுது, திடீரென அங்கிருந்து முயல் ஒன்று கிளம்பியதாகவும், அதை பிடிக்க அவர் நாயை அவிழ்த்து விடுவதாகவும் செவிவழி வரலாறு கூறப்படுகிறது. நாயானது முயலை விரட்டி கொண்டு வரும் பொழுது, அந்த முயல் ஒரு புதருக்குள் ஒளிந்துகொண்டு நாயை வீரமாக விரட்டியடித்ததாம். எனவே வீரம் மிகுந்த அவ்விடத்திலேயே தன்னை பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று கழுவம்பாறை கருப்புசாமி எண்ணி, அவ்விடத்திலேயே தற்போது சிலையாகக் கோயிலில் இருப்பதாகவும் இவ்வூர் பெரியவர் கூறினார்.
கோயில் அமைப்பு
ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் பீடத்தின் மேல் கருப்பசாமி சிற்பமும், அவருடைய நாயின் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் கருப்பசாமி குதிரையின் மேல் அமர்ந்துள்ள சிற்பமும் அதன் அருகில் நாய் மற்றும் பூதகணத்தின் சிற்பமும் அமைந்துள்ளன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலுக்கு எட்டு அம்பலக்காரர்கள் உள்ளனர். எட்டாவது அம்பலக்காரர் கோயிலின் அனைத்து கணக்கு வழக்குகளையும் கையாளுகிறார். ஊர் நன்மைக்காக ’அம்மன் எடுப்பு திருவிழா’ நடத்தப்படுகிறது. மாவிளக்கு இட்டு, முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வழிபட்ட பின்னர் அம்முளைப்பாரியை எடுத்துச் சென்று கரைத்து விடுவார்கள். இத்திருவிழாவின் போது ஏழாவது அம்பலக்காரருக்கு முதல் மரியாதையும், குதிரை எடுப்பு திருவிழாவின் போது இரண்டாவது அம்பலக்காரருக்கு முதல் மரியாதையும், ஜல்லிக்கட்டின் போது மூன்றாவது அம்பலக்காரருக்கு முதல் மரியாதையும், சித்திரை வருட பிறப்பு அன்று நான்காவது அம்பலக்காரருக்கு முதல் மரியாதையும், ஒவ்வொரு விழாக்களிலும் கிராம மண்டபங்களில் நாடகம் நடைபெறும் பொழுது முதலாவது அம்பலக்காரருக்கு முதல் மரியாதையும் அளிக்கப்படுகிறது.
Worship Timings
There are two worship services every day.
Festivals details
A festival is held in the month of Chithirai.
Rituals of worship / Methods
There are rituals such as goat sacrifice, carrying clay horses, and piercing the black and red dots on the body.
Inscription / Copper
No
Sculptures
Sculptures of Bhutaganas, Dog, and other guardian deities are found.
Architecture
A sculpture of Karuppasamy and his dog are placed on the pedestal in a mandapa-like structure. In the front part of the temple, there is a sculpture of Karuppasamy sitting on a horse, and next to it are sculptures of a dog and a Bhuthaganam.
Additional Information
This temple has eight Ambalakkarars. The eighth Ambalakkarar handles all the accounts of the temple. The 'Amman Eduppu' (carrying the goddess in a procession) festival is held for the benefit of the village. After lighting the Mavilakku, bringing the Mulaipari (sprouted or germinated grains) and worshipping the Amman, they take the Mulaipari and dissolve it. During this festival, the seventh Ambalakkarar is given first respect, during the Kuthirai Eduppu festival (carrying clay horses), the second Ambalakkarar is given first respect, during Jallikattu, the third Ambalakkarar is given first respect, on the day of Chithirai year, the fourth Ambalakkarar is given first respect, and during every festival, when drama is performed in the village halls, the first Ambalakkarar is given first respect.