Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெரிய கருப்பசாமி கோயில்

Periya Karuppasami Temple

கோயிலின் வேறு பெயர்

கருப்பு


அமைவிடம்

ஊர் எல்லையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

இக்கோயிலில் வற்றாத தாமரை குளம் உள்ளது


ஊர்

வஞ்சிநகரம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
கருப்பசாமி
கோயில் குளம்/ஆறு
தாமரை குளம் உள்ளது
பூசைக்காலம்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வருடா வருடம் தை 1 ஆம் தேதி திருவிழா நடைபெறும். அன்று சாமியாடி அருள் வாக்கு சொல்லப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒவ்வொரு வேண்டுதலுக்கும் கிடாய் வெட்டுதல் நடத்தப்படுகிறது. மேலும் வேண்டிக்கொண்டவர் கோயிலில் இருந்து துண்டு வாங்கிச்செல்வார்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
தல வரலாறு / கதைகள்
இவ்விடத்தில் ஆயிரம் வருடம் பழமையான புளிய மரம் ஒன்று உள்ளது. அம்மரத்தில் கருப்பசாமி குடிகொண்டு இருப்பதாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. முன் பகுதியில் பெரிய கருப்பு சாமியும், அதற்கு பின் சின்னகருப்பு சாமியும், நொண்டி முன்னோடியும் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கருப்பு சாமி ’மலையாளக்கருப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெருங்காட்டு மலையைக் குறித்து வாத்தியார் ஐயா என்னும் சித்தர் புகழ்ந்து பாடியுள்ளார் என சொல்லப்படுகிறது. வறட்சி காலத்தில் இந்த சித்தர் பாடிய பாடலால் அங்கிருந்த ஊற்றில் நீர் சுரந்ததாகவும் அந்நீரை பருகிய சித்தர் அது அமிர்தம் போல் உள்ளதாகப் புகழ்ந்துப் பாடியுள்ளார்.
கோயில் அமைப்பு
ஒரு திறந்தவெளி கோயில் அமைப்பு/ கூரை இல்லாக் கோயில்
கூடுதல் விவரங்கள்
இவ்வூரில் கருப்பசாமி குடிகொண்டு இருப்பதாக நம்பப்படும் பழமையான புளிய மரத்தின் கீழ் மேடை போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இம்மேடையின் மேல் பல உலோகத்தினால் ஆன நீள் அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மேடையின் அருகில் ஒரு நீண்ட இருக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஊரில் ஏதேனும் களவு நடைப்பெறும் பொழுது கருப்பசாமியிடம் வேண்டினால் அவை திரும்பக் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. விபத்தில் படுகாயமடைந்தவருக்கு இக்கோயில் விபூதியை அணிவித்தால் அவர் குடைமடைவார் என்பது நம்பிக்கை. மேலும், இக்கோயிலில் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு, அவ்வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கருங்காலக்குடி தொல்லியல் இடம்
செல்லும் வழி
மேலூரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் வழி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

கேட்பொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்