எப்பொழுதும் கோயில் திறந்தேயிருக்கும். கோயில் எல்லைக்குள் பெண்கள் செல்ல அனுமதியில்லை.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதி திருவிழா நடைபெறும். அன்று இரவு 12.00 மணிக்கு மேல் 10 முதல் 15 கிடாய்கள் வெட்டப்பட்டு விருந்தாக படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இவ்வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ஊர் பெண்கள் இவ்வுணவை சாப்பிடமாட்டார்கள்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆட்டுக்கிடாயை வெட்டி படையலிட்டு வழிபடுகின்றனர்.
கூடுதல் விவரங்கள்
இக்கன்னிமார் கோயிலில் வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஏழு கற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏழு கன்னி தெய்வங்களாக பாவித்து வழிபடுகின்றனர். இக்கோயில் வளாகத்தை குறிக்கும் விதமாக, சுற்றி அரை வட்ட வடிவில் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கன்னிமார் கோயில்களில் ஒரே உருவ அமைப்பைக் கொண்ட ஏழு பெண் தெய்வங்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் சிற்பம் வழிபடப்படும். ஆனால் இங்கு பெண் உருவ அமைப்பு இல்லாத ஏழு கற்கள் வழிபடப்படுவது சிறப்பாகும். இக்கன்னிமார் ஆலயத்தின் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
Worship Timings
The temple is always open. Women are not allowed to enter inside the temple boundary.
Festivals details
Every year, the festival is celebrated on the 18th of the month of Aadi. On that day, after midnight at 12:00, 10 to 15 goats are slaughtered, prepared as a feast, and offered in worship. Only men participate in this ritual. The women of the village do not partake in this food.
Rituals of worship / Methods
A goat is slaughtered, divided, and offered in worship.
Additional Information
In this Kannimar temple, seven stones of different shapes are arranged in a row. These are worshipped as the seven virgin goddesses. To define the temple precinct, the stones are placed in a semi-circular pattern. Generally, in Kannimar temples, a sculpture of seven female goddesses in the same form is worshipped in a row. However, here the seven stones without female forms are worshipped, which is unique. Only men participate in the temple festival of this Kannimar temple.
தகவல்
முனைவர் முத்தையா
Details
Dr. O. Muthiah
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
முத்தாலம்மன் கோயில்
Nearby Monuments
Muthalamman Temple
செல்லும் வழி
செந்துறையிலிருந்து கருத்தநாயக்கன்பட்டி செல்லலாம்.
Directions
You can go to Karuthanayakkanpatti from Senthurai.