Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயில்

Maha Sankatahara Chaturthi Vinayaka Temple

கோயிலின் வேறு பெயர்

அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோயில்


அமைவிடம்

கோபால சமுத்திரக் கரையில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

ஒரே கோயிலில் 108 விநாகயர் சிலைகள் காணப்படுவது இக்கோயிலின் சிறப்பாகும்.


ஊர்

பள்ளப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

கோயில் குளம்/ஆறு
கோபால சமுத்திரம்
பூசைக்காலம்
காலை 6:30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
மகா சிவராத்திரி, பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பால் குடம் எடுத்தல், தயிர் அபிஷேகம் செய்தல் போன்ற வழிபாட்டு முறைகள் இங்கு காணப்படுகின்றன.
சிற்பங்கள்
இக்கோயிலின் மூலவரான நன்மை தரும் விநாயகரை தவிர 107 விநாயகர் சற்பங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஐயப்பன், தக்ஷனாமூர்த்தி, அண்ணாமலை சிவன், உண்ணாமலை அம்மன், முருகன், நவகிரகங்கள், மாரியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், நாகர் சிலைகள், பைரவர் சிலை ஆகியனவும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
மிக உயரமான மண்டபத்தில் 32 அடி உயரம் உள்ள விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை நோக்கியவாறு பெரிய மீஞ்சூல் சிற்பமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் இடப்புறம் சிவன்-பார்வதி சந்நிதியும் 107 விநாயகர் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
நன்மை தரும் விநாயகர் என்று பெயர்பெற்ற 32 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவன் அருவுருவமாகவும் (லிங்க வடிவிலும்), உருவமாகவும் காட்சியளிக்கிறார்.
தகவல்

முனைவர் முத்தையா

புகைப்படங்கள்

ம. சதீஸ் குமார்

ம. சதீஸ் குமார்