Located on the northern side of the village on the Kanmayakkarai.
Name of the Chief deity
Unukal Ayyanar
Temple Pond/River
There is a tank near the temple.
Village Name
Unukal Puliyankulam
District
Madurai
பூசைக்காலம்
இது கூரையில்லாக் கோயில் என்பதால் எந்நேரமும் திறந்தே இருக்கும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டுதல் நடைபெறும்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
இங்கு குதிரைகள், யானைகள், பூதகணங்கள், நடன பெண்கள், இசைக்கலைஞர்கள், தெய்வ உருவ சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான அய்யனாரின் தலையில் ஜட்டா பாரம் எனப்படும் தலை அலங்காரமும், பூரிமம் என்ற அணிகலனும் காணப்படுகின்றன. இவர் கையில் செண்டு அல்லது சாட்டை ஏந்தியுள்ளார். அய்யனாரின் இருபுறங்களிலும் அமர்ந்துள்ள தேவியர், தங்கள் தலையில் கரண்ட மகுடம் அணிந்து, கையில் மலர் ஏந்தியுள்ளனர். இம்மூவருக்கும் கழுத்து, கை மற்றும் கால்களில் அணிகலன்கள் பல காட்டப்பட்டுள்ளன.
கோயில் அமைப்பு
திறந்தவெளி கோயில் / கூரையில்லாக் கோயில்.
கூடுதல் விவரங்கள்
இந்தத் திறந்தவெளி கோயிலில் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் மேல், காவல் தெய்வமான அய்யனார் மற்றும் அவரின் இரு புறங்களிலும் பூரணை, புஷ்கலை என்ற இரு தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதன் அருகில் மற்றொரு பீடத்தின் மேல் மூன்று யானை சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயில் போன்ற இடத்தின் இருபுறங்களிலும் பெரிய பீடத்தின் மேல் மிகப்பெரிய குதிரை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரையின் மேல், கையில் ஆயுதம் ஏந்திய காவல் தெய்வங்கள் அமர்ந்துள்ளனர். இவ்விரு குதிரைகளின் முன்னங்கால்கள் இரு பூதகணங்களின் தலைமேல் ஊன்றப்பட்டுள்ளன. குதிரைகளின் கீழ் பகுதியில் பல மனிதர்கள் மற்றும் தெய்வங்களின் உருவ சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இவ்வூர் அய்யனார் ஊனமுற்று இருந்ததால் இவருக்கு ஊனுகால் அய்யனார் என்ற பெயர் வந்ததாக இப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது.
Worship Timings
Since it is a roofless temple, it is open at all times.
Festivals details
The festival is held in the month of Chithirai.
Rituals of worship / Methods
To fulfil their vows, a buck/billy goat is sacrificed.
Inscription / Copper
No
Sculptures
Horses, elephants, Bhoothaganas, dancing women, musicians, and sculptures of deities are seen here. Ayyanar, the main deity of this temple, has a headdress called Jatta bharam and an ornament called Poorimam on his head. He is holding a cendu or whip in his hand. The goddesses sitting on either side of Ayyanar are wearing a karanda makuta on their heads and holding flowers in their hands. All three are shown wearing numerous ornaments on their necks, arms, and legs.
Architecture
Open-air temple / roofless temple.
Additional Information
In this open-air temple, on the pedestal set up with steps, there are sculptures of the guardian deity Ayyanar and two goddesses Pooranai and Pushkalai on either side of him. Near this, three elephant sculptures are placed on another pedestal.
_x000D_
On either side of the entrance to this place of worship, huge horse sculptures are placed on a large pedestal. On the horses, guardian deities are seated with weapons in their hands. The forelegs of these two horses are placed on the heads of two Bhuthaganas. On the lower part of the horses, many human and divine sculptures are shown.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
Details
Dr. M. Marudhu Pandiyan
குறிப்புகள்
கணபது ஸ்தபதி, சிற்ப செந்நூல்- பக்கம் -76-78,
Reference
கணபது ஸ்தபதி, சிற்ப செந்நூல்- பக்கம் -76-78,
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
வலச்சிகுளம்
Nearby Monuments
Valachikulam
செல்லும் வழி
வலச்சிகுளத்திலிருந்து மருதூர் செல்லும் வழியில் உள்ளது