The temple is located at the entrance of the village.
Name of the Chief deity
Kodangirayan
Village Name
E.Malampatti
District
Madurai
பூசைக்காலம்
எந்நேரமும் திறந்தே இருக்கும் கோயில்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடனாக ஆடுக் கிடாய் மற்றும் கோழி பலியிடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
ஒரு பீடத்தின் மேல் பல உலோகத்தினால் ஆன அரிவாள்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
இவ்வழிபாட்டு தலத்தில் ஒரு பீடத்தின் மேல், வெவ்வேறு வடிவங்கள் கொண்ட பல கற்களும், அரிவாள்களும், பலிபீடமும், நாகர் சிற்பமும், எலி சிற்பமும் மற்றும் திரிசூலங்களும் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. இங்கே எவ்வித தெய்வ உருவ சிற்பங்களும் இல்லை. மாறாக பெரிய பெரிய கற்களே வழிபடப்படுகின்றன. குறிப்பாக இப்பீடத்தின் ஒரு புறம், இரண்டு செங்கற்களின் மேல் ஒரு கருங்கல் வைக்கப்பட்டு, அதை நோக்கியவாறு மூஞ்சூறு எனப்படும் எலியின் சிறப்பம் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அக்கருங்கல்லை விநாயகராக பாவித்து வணங்கி வருகின்றனர் என்று கருத வாய்ப்புள்ளது.
பெரும்பாலான கோயில்களில் காணப்படும் தெய்வ உருவ சிலைகள் ஏதுமின்றி, ஒரே ஒரு மேடை போன்ற அமைப்பின் மேல் அரிவாள்கள், சூலங்கள் மற்றும் கற்களை மட்டுமே வைத்து வழிபாடு செய்யும் இம்மக்களின் வழக்கம் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். தமிழ்நாட்டின் நாட்டுப்புற வழக்கங்களில் இது மாதிரியான வழிபாடுகள் பல இடங்களில் காணப்படுகின்றன.
Worship Timings
The temple is open at all times.
Festivals details
The festival is held in the month of Chithirai.
Rituals of worship / Methods
To fulfil their vows, billy goats and chickens are sacrificed.
Inscription / Copper
No
Architecture
Several metal sickles are placed on a pedestal.
Additional Information
In this place of worship, on a pedestal, many stones of different shapes, sickles, a balipitha (an altar), a Naga sculpture, a rat sculpture and tridents are placed and worshipped. There are no sculptures of deities here. Instead, large stones are worshipped. In particular, on one side of this pedestal, a black stone is placed on two bricks, and a shrew (Moonjuru) is placed facing it. Therefore, it is possible to assume that the black stone is being worshipped as Lord Ganesha._x000D_
_x000D_The custom of these people, who do not have any idols of deities found in most temples, but worship only with sickles, tridents, stones on a single platform-like structure, is remarkable. This type of worship is found in many places in the folk customs of Tamil Nadu.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
Details
Dr. M. Marudhu Pandiyan
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நெவுலிநாதர் கோயில்
Nearby Monuments
Nevulinathar Temple
செல்லும் வழி
மேலூரிலிருந்து திருப்பத்தூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து இ.மலம்பட்டி ஊருக்கும் செல்லும் வழியில் செல்லலாம்.
Directions
From Melur to Tirupattur, you can take the road leading to E. Malampatti village by separating from the national highway.