Sri Niladevi Sametha Sarvamangala Saneeswaran Temple
place
Located on the way from Thiruvadhavur to Thiruppuvanam.
Name of the Chief deity
Saneeswaran
Village Name
Thiruvadavur
District
Madurai
பூசைக்காலம்
மூன்று காலம் பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
அபிஷேகம் மற்றும் நேத்திக் கடன் செலுத்தப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 20ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
சனீஸ்வரன், யமன், சித்திரகுப்தன், பிரேமா தேவி, நிலாதேவி, அய்யப்பன், விநாயகர், முருகன், குருபகவான், தஷிணாமூர்த்தி, நாகர் ஆகியோரின் தெய்வ உருவ சிற்பங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
கோயிலின் நுழைவாயிலில் சிற்பத்துடன் அலங்கரிக்கப்பட்ட இரண்டு நுழைவு வளைவுகள் காணப்படுகின்றன. கோயிலின் முதன்மை மண்டபத்தில் சனீஸ்வரன் மற்றும் நிலாதேவி சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் சிறு பீடங்களிலும் சந்நிதிகளிலும் பிற தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
சனீஸ்வரன் என்பவர் நவக்கிரகங்களில் ஒருவராகவும், சூரிய தேவன் மற்றும் சாயா தேவியின் மகனாகவும் கருதப்படுகிறார். இவர் காகத்தை தன் வாகனமாகக் கொண்டுள்ளார். இக்கோயிலின் முதன்மை மண்டபத்தில், தன் வாகனமான காகத்தின் மேல் சனீஸ்வரன் அமர்ந்துள்ளவாறு காட்சி அளிக்கிறார். இவரது மடியில் இவரது மனைவியான நிலா தேவி அமர்ந்துள்ளார்.
கிரக பெயர்ச்சியின் போது, குறிப்பாக சனி பெயர்ச்சியின் போது, இவர் ஏற்படுத்தும் பலன்கள் மற்றும் விளைவுகள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. எனவே, சனி பெயர்ச்சியை ஒட்டி இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த கோயிலில் ராகு-கேது தோஷ பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. குரு பெயர்ச்சி அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
Worship Timings
There are three worship services.
Festivals details
A festival is held in the month of Chithirai.
Rituals of worship / Methods
Performance of Abhishekam and paying off their prayers or vows.
Inscription / Copper
No
Sculptures
There are sculptures of the deities of Saniswaran, Yama, Chitragupta, Prema Devi, Niladevi, Ayyappa, Vinaya, Murugan, Guru Bhagavan, Dashinamurti, and Naga.
Architecture
The entrance of the temple has two entrance arches decorated with sculptures. The main mandapa of the temple has large sculptures of Saneeswaran and Niladevi. Sculptures of other deities are found on small pedestals and in side the shrines of the temple premises.
Additional Information
Lord Saniswara is considered one of the Navagrahas and the son of Surya Deva and Chaya Devi. He has a crow as his vehicle. In the main mandapa of this temple, Lord Saniswara is depicted as sitting on his vehicle, a crow. His wife, Nīlā Dēvi (Nīlāvati), sits on his lap.
During planetary transits, especially during Saturn transits, the benefits and effects he brings are of great importance in astrology. Therefore, special worship is performed in this temple on the occasion of Saturn transits. Rahu-Ketu dosha pariharas (remedial measures) are performed in this temple. Special worship is also performed on the day of Guru transits.
தகவல்
முனைவர் மருதுபாண்டியன்
Details
Dr. M. Marudhu Pandiyan
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருமறைநாதர் கோயில்
Nearby Monuments
Thirumarainathar Temple
செல்லும் வழி
திருவாதவூரிலிருந்து திருப்பூவனம் செல்லும் வழியில் உள்ளது.
Directions
It is on the way to Thiruppoovanam from Thiruvadhavuur.