மாணிக்கவாசகர் பிறந்த நாளான ஆனி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திரத்தன்று வருடம் தோறும் குரு பூஜை நடைபெறுகிறது.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 20ஆம் நூற்றாண்டு
தல வரலாறு / கதைகள்
சைவக் குரவர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பிறந்த தலம் திருவாதவூர் ஆகும். எனவே அவர் பிறந்து வளர்ந்த வீட்டை தற்போது கோயிலாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் சுற்று பிரகாரம் உள்ளது. உயர்ந்த மதில் சுவரால் கோயில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தலை வாசல் கிழக்கு பார்த்தும் மறு வாசல் மேற்கிலும் அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
திருவாதவூர், சைவக் குரவர்களுள் ஒருவரான மாணிக்க வாசகர் பிறந்த தலம் என்பதால் அவருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. மாணிக்கவாசகரின் இயற்பெயர் திருவாதவூரர் ஆகும். இவருடைய தந்தை திருவாதவூரில் உள்ள மிகப்பழமையான சிவன் கோயிலான திருமறைநாதர் சுவாமி கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்தார். இந்தக் கோயிலில் உள்ள மண்டபத்தில், சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி கேட்டருளியதாகக் கூறப்படுவதால், இந்த நூறுகால் மண்டபம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
மாணிக்கவாசகர் சிறுவயதிலருந்தே மிகுந்த சிவபக்தி கொண்டவராக விளங்கினார். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன், அரிமர்த்தன பாண்டியன், அவரை தனது அமைச்சராக பணியமர்த்தினார். இவருக்குத் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டப் பெயரும் அளித்தான். வாதவூரர், திருப்பெருந்துறை முதலிய இடங்களுக்குச் சென்று திருவாசகப் பாக்களையும் திருக்கோவையாரையும் இயற்றி பக்தி செலுத்தினார். சிதம்பரத்தில் ஈழ நாட்டரசன் மகளான ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தார் என்றும் பௌத்தரை வாதிட்டு வென்றார் என்றும் இவர் வரலாறு கூறுகிறது. இவரது திருவாக்குகள் மாணிக்கம் போல இருந்ததால் 'மாணிக்கவாசகர்' என்னும் பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. இவர், தமது முப்பத்திரண்டாவது வயதில் சிவகதியடைந்தார்.
அருள்மிகு மாணிக்கவாசகர், இத்திருக்கோயிலில் நின்ற கோலத்தில் கருவறையில் காட்சியளிக்கிறார். உயிருண்ணிப்பத்து கிணறு என்று அழைக்கப்படும் தீர்த்தம் கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ளது. திருவாசகம் முற்றோதுதல் பயிற்சி மற்றும் திருவாசக உரை தொடர்பான சொற்பொழிவுகள் இக்கோயிலில் நடைபெறுகிறது.
Temple Pond/River
A well known as Uyiruṇṇippattu kiṇaṟu
Worship Timings
It opens at 6 am.
Festivals details
Guru Puja is held every year on the day of Maham Nakshatra in the month of Ani, which is the birthday of Manikvaasagar.
Architecture
The temple, which is located towards the east, has a sanctum, an ardha mandapam, a maha mandapam and a circumambulatory prakaram. The temple is protected by a high wall. The main entrance faces the east and the other entrance faces the west.
Additional Information
Thiruvadavur is the birthplace of Manikka Vaachsakar, one of the Saiva Kuravas, and a temple is built here to worship him. Manikka Vachakar's original name is Tiruvaadavurar. His father worked as the priest of the oldest Siva temple in Tiruvaadavur, Tirumarainathar Svami Temple. This hundred-pillared mandapam is considered special because it is said it was in this mandapa that Lord Siva made Manickavachakar hear the sound of the anklets (Silamboli).
Manika Vaasagar was a great devotee of Siva from his childhood. The Pandya king, Arimardana Pandiyan, who was amazed by Tiruvaadavurar's (Manickavachakar’s) intelligence, appointed him as his minister. He also gave him the title of Thennavan Brahmarayan. Vaachagar went to places like Tiruperundurai and composed verses of Tiruvaachaga Paas and Thirukovaiyar and expressed his devotion. History says that he made the mute daughter of the king of Eelam Nadu speak in Chidambaram and that he won over the Buddhists by arguing against them. His divine words were like gems, so he was given the name 'Manickavasagar'. He attained salvation (Sivagati) at the age of thirty-two.
The venerable Manickavachakar is depicted in the sanctum sanctorum of this temple in a standing position. The theertham known as Uyiruṇṇippattu kiṇaṟu (the well of life) is located to the north-east of the temple. The practice of reciting the Tiruvachakam and lectures on the text and commentaries of the Thiruvasakam are held in this temple.