Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

எல்லைக் கோயில்

Ellai Temple

அமைவிடம்

திருவாதவூரிலிருந்து திருப்பூவனம் செல்லும் வழியில் உள்ளது


மூலவர் பெயர்

எல்லைச் சாமி


பூசைக்காலம்

இது கூரையில்லாக் கோயில் என்பதால் எந்நேரமும் திறந்தே இருக்கும்.


ஊர்

வேப்படப்பு (கட்டயம்பட்டி)

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
இக்கோயிலுக்கு அருகில் உள்ள நிறைகுளத்து அய்யனார் மற்றும் அய்யனார் கோயில் திருவிழாக்காலங்களில் இக்கோயிலுக்கும் வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய் வைத்து, பத்தி மற்றும் சூடம் ஏற்றி வழிபடுவர்.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
திறந்தவெளி கோயில் / கூரையில்லாக் கோயில்.
கூடுதல் விவரங்கள்
ஊர் எல்லையைக் காப்பதால் இக்கோயிலுக்கு எல்லைக் கோயில் என்றும் இந்த தெய்வத்திற்கு எல்லைச்சாமி என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கோயில்களில் காணப்படும் தெய்வ உருவ சிலைகள் ஏதுமின்றி, ஒரே ஒரு மேடை போன்ற அமைப்பின் மேல் மிகப் பெரிய இரண்டு அரிவாள்களை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். பீடத்தின் ஒருபுறம் அமைந்துள்ள இரண்டு குத்துக் கற்களில் உலோக மணிகள் கட்டப்பட்டுள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நிறைகுளத்து அய்யனார் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேப்படப்பு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்