செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகாசி மாதம் இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும். மகா சிவராத்திரி மற்றும் ஆடி வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் 3, 5, 7, 9,... போன்ற ஒற்றைப்படை ஆண்டுகளில் குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் மற்றும் குதிரை எடுப்பு போன்ற வழிபாட்டுச் சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சுவரோவியம்
ஆஞ்சநேயர் மற்றும் கருடர் சுவரோவியங்கள் உள்ளன.
சிற்பங்கள்
இக்கோயிலில் முருகன், ராகு கேது, பிள்ளையார், கருப்பண்ணசாமி, அய்யனார், நாகப்பசாமி, பேச்சியம்மன், ராக்காயி, முத்து கருப்பு, சின்ன கருப்பு, அக்னி வீரபத்திரன், அகோர வீரபத்திர, இருளப்பசாமி, பாண்டி சாமி, சப்த கன்னிமார், ஆஞ்சநேயர், பாம்பாட்டி சித்தர், அண்ணாச்சி மற்றும் குதிரை வாகன சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில், மூப்பர் சமூகத்தினர் கருப்பணசாமி சிலையை பெட்டியில் தூக்கிக்கொண்டு மேலக்கால் எனும் இவ்வூர் வழியாகச் சென்றனராம். அக்காலத்தில் இப்பகுதி சோலை வனமாக இருந்ததால், அவர்கள் இவ்விடத்தில் இளைப்பாறலாம் என்றெண்ணி பெட்டியை கீழே இறக்கி வைத்துள்ளனர். பின்னர் பயணத்தைத் தொடர முயன்றபோது, பெட்டியை தூக்க முடியவில்லையாம். அவர்களில் ஒருவருக்கு அருள் வந்து, “நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். இங்கு வந்து என்னை வணங்குங்கள்” என கருப்பணசாமி கூறியதாக ஊர் மக்களால் நம்பப்படுகிறது. அதன் பின்னர், இவ்விடத்தில் ஏற்கனவே இருந்த அய்யனார் கோயிலில் பரிவார தெய்வங்களுடன் கணவாய் கருப்பணசாமிக்காக ஒரு சந்நிதி அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருவதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.
கோயில் அமைப்பு
கோயில் நுழைவாயிலில் அலங்கரிக்கப்பட்ட கோபுரம் காணப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்த உடன் இருபுறங்களிலும் பெரிய குதிரை சிற்பங்கள் காணப்படுகின்றன. இவ்விரு குதிரைகளின் மேல் அய்யனார் மற்றும் கருப்பணசாமி அமர்ந்துள்ளனர். குதிரைகளின் கீழ் பெரிய பூத சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலின் இடது புறத்தில் கருப்பணசாமி சந்நிதியும், நுழைவாயிலின் வலது புறத்தில் நேர்த்திக் கடனுக்காக செலுத்தப்படும் குதிரை சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அருகில் அய்யனார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் வளாகத்தில் பல வகையான இறையுருவ சிற்பங்களும் குதிரை சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கு ராகு கேதுவுக்கு தனி சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் இரண்டு கருப்பணசாமி சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கருப்பணசாமி தன் வலக்கையில் அரிவாளும் இடக்கையில் கதையும் ஏந்தி உள்ளார். இக்கோயில் பூசாரியின் அருள்வாக்கால் பல நன்மைகள் நடந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கணவாய் ஊரணிக்கு அருகாமையில் துர்க்கை அம்மன் தனி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. சுமார் மூன்று அடி உயரம் உள்ள இச்சிற்பம் ஊரணியை சுத்தம் செய்யும் பொழுது கண்டெடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது.
கணவாய் கருப்பணசாமி கோயிலுக்கு அருகில், வலப்பக்கம், இரண்டு நடுகல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இடப்பக்கம் உள்ள நடுகல் சிற்பத்தின், நடுவில் ஒரு ஆணும், அவன் இருபுறங்களிலும் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையின் வடிவம் காணப்படுகிறது. நடுகல்லில் காணப்படும் ஆண் தான் கையில் நீளமான வாளும் கேடயமும், தோள்பட்டையில் வில்லும் அம்புறாத் தூணியும், இடுப்பில் கத்தியும் வைத்துள்ளான். பூவத்தேவன் என்பவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லை இன்று வரை அவர் வம்சாவளிகள் வழிபடுகின்றனர்.
வலப்பக்கம் உள்ள நடுக்கலில் ஒரு ஆண் தன் கையில் ஈட்டி போன்ற ஆயுதத்தை ஏந்தியவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவனது இடுப்பில் கத்தி காணப்படுகிறது. இந்நடுகல்லின் கீழ்பகுதியில் ஒரு நபர் பன்றியை வேட்டையாடும் காட்சியும் உள்ளது. முற்காலத்தில் இப்பகுதிக்கு காவல்காரராக இருந்த ஒருவருக்கு இந்நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
Temple Tree
Bael tree
Temple Pond/River
Pond
Worship Timings
Poojas are held on Tuesdays and Fridays.
Festivals details
In the month of Vaikasi, a two-day festival is celebrated. Special worship is conducted on days like Maha Shivaratri and Aadi Velli. Additionally, in odd-numbered years such as 3, 5, 7, 9…, the horse-carrying festival is held.
Rituals of worship / Methods
Worship rituals such as preparing pongal, breaking coconuts, and the horse procession are observed.
Inscription / Copper
No
Mural
There are murals of Anjaneyar and Garuda on the walls.
Sculptures
This temple has sculptures of Murugan, Rahu Ketu, Pillaiyar, Karuppannasami, Ayyanar, Nagappasami, Pechiyamman, Rakkayi, Muthu Karuppu, Chinna Karuppu, Agni Veerabathran, Akora Veerabathra, Irulappasami, Pandhi Sami, Sapta Kannimar, Anjaneyar, Pambatti Sthitar, Annachi, and horse vehicle sculptures.
Architecture
At the temple entrance, a decorated gopuram is seen. Upon entering the temple, large horse sculptures are visible on both sides. On top of these two horses, Ayyanar and Karuppanasamy are seated. Beneath the horses, large guardian (booth) sculptures are also seen. On the left side of the temple entrance is the Karuppanasamy sanctum, and on the right side, horse sculptures offered as vows are installed. Near them, the Ayyanar sanctum is also established. A compound wall surrounds the temple.
Additional Information
In the temple complex, various deity sculptures and horse sculptures can be seen. A separate sanctum is also established for Rahu and Ketu. In the temple hall, two Karuppanasamy statues are installed. Karuppanasamy holds a sickle in his right hand and a sword in his left hand. Villagers say that many blessings have occurred due to the priest's divine words in this temple.
Near this temple, close to Kanavai village, a separate Durga Amman statue is located. This statue, about three feet tall, was discovered while cleaning the village area and is now used for worship.
Near the Kanavai Karuppanasamy temple, on the right side, two stone sculptures are seen. In the stone sculpture on the left, a male figure is in the center, flanked by two women and a boy. The male figure holds a long sword and a mace in his hands, a bow and spear on his shoulder, and a knife on his waist. This sculpture, dedicated to Poovathevan, is still worshipped by his descendants.
In the right-side stone sculpture, a male figure is depicted holding a hook-like weapon in his hand, with a sword at his waist. Below this sculpture, a scene of a man hunting a pig is also carved. In ancient times, this stone was taken by a person who served as a guardian for the area.
தகவல்
முனைவர் மகாலிங்கம்
Details
Dr. A. Mahalingam
குறிப்புகள்
தென் கல்லக நாட்டில் நடுகற்கள், அருண் பேக்காமன், பக்கம் 56-60
Reference
Hero stones in South Kallaga Nadu, Arun Beckhaman, pages 56-60