ஊரின் வரலாற்றுப் பெயர்
நெடுமதுரை
ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
மொத்த மக்கள் தொகை 1965 ஆகும். இவர்களில் பெண்கள் 985 பேரும் ஆண்கள் 980 பேரும் உள்ளனர்.
ஊர்
நெடுமதுரை
மாவட்டம்
மதுரை
மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த போது மதுரை கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துவந்தன. இந்நிலையைச் சரி செய்யும்பொருட்டு, திருமலை நாயக்கர் நெடுமதுரை, ஐராவத நல்லூர், வலையபட்டி, வலையன்குளம், உள்ளிட்ட 25 கிராமங்களை கோயில் பணியாளர்களின் நிர்வாகத்தில் விட்டு, அந்த கிராமங்களிலிருந்து கிடைக்கக்கூடிய 12,000 பொன் வருவாயை கோவிலுக்குக் கொடுக்கச் சொன்னார்.
இக்குழுவின் பணிகளை மூன்று பிரிவாகப் பிரித்தார். முதலாவது, நிர்வாக / சிப்பந்திப் பொறுப்பு கட்டளை – இந்த வகைக் கிராமங்களைக் கவனித்துக் கொள்பவர்கள், சில குறிப்பிட்ட கோயில் பணிகளைக் கவனிக்கவேண்டும் இரண்டாவது, அர்ச்சனாபாகம் – இந்த வகைக் கிராமங்களிலிருந்து கிடைக்கூடிய வருவாய், நித்தியப்படி பூஜைகளுக்கு ஆக வேண்டிய செலவுகளுக்காக அளிக்கப்படவேண்டும். மூன்றாவது, அறக்கட்டளை – இந்த வகை கிராமங்களில் நிலங்கள் இறையிலியாக வழங்கப்பட்டு அவற்றிலிருந்து வரும் வருவாய் சிறப்பு பூஜைகளுக்கும் திருவிழாக்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.
நெடுமதுரையில் ஸ்ரீஅய்யனார்சாமி திருக்கோயிலில் புரவி எடுப்பு திருவிழா பல காலமாக நடந்துவருகிறது. இங்கு புரவி / குதிரை எடுப்பு பெருவிழா 25-ஆண்டுகளுக்கு பின்னர் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறைக்கு புரவியெடுப்பு என்று பெயர். தென் தமிழக பகுதிகளில் காக்கும் தெய்வமாக விளங்கும் அய்யனாரின் வாகனமாகத் திகழும் குதிரைகளுக்கு இந்த புரவி எடுப்பு திருவிழா நடத்தப்படுகிறது. ஊர் மந்தையில் மருளாடிகளுக்கு (சாமியாடிகள்) சாமி இறக்கிய பின்னர் மேளதாளம் முழங்கிட குதிரைகளை கண்மாய்கரை அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
முனைவர் ஆத்மநாதன்