Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இவ குன்றம் வரலாறு

History of Anaimalai

ஊரின் வரலாற்றுப் பெயர்

இவ குன்றம்


பெயர்க் காரணம்

ஆனை மலையின் வடிவம், ஒரு யானை அமர்ந்திருப்பது போல் தோன்றுவதால், பன்னெடுங்காலமாக இம்மலை ’யானை மலை’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இம்மலையின் மேல் உள்ள கற்படுக்கைகள் அடங்கிய குகைத்தளத்தில் காணப்படும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டிலும் இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது - "இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்". ’இவ’ என்பது ’இபம்’ என்ற வடமொழிச் சொல்லின் மாறுபட்ட வடிவமாகும். ’இவ’ என்பது யானையைக் குறிக்கும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் ஆனைமலை என்று பொருள்படுகிறது.


ஊர் வரலாறு

யானைமலையில் 2000 ஆண்டிற்க்கு முற்பட்ட தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டுகள், கற்படுக்கைகள் மற்றும் பிற்காலக் குடைவரைக் கோயில்கள் (நரசிங்கபெருமாள் கோயில், லாடன் கோயில்), வண்ணம் பூசப்பட்டச் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.


ஊர்

யானைமலை

மாவட்டம்

மதுரை

தகவல்

முனைவர் துர்கா தேவி

புகைப்படங்கள்

தெ.துர்க்கா தேவி