Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

குருவித்துறை வரலாறு

History of Kuruvithurai

ஊரின் வரலாற்றுப் பெயர்

குருவின் துறை


பெயர்க் காரணம்

பல காலம் முன்பு, இவ்விடத்தில் குரு பகவான் (வியாழன்) தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டார் என சொல்லப்படுகிறது. எனவே இவ்விடம் ’குருவின் துறை’ என அழைக்கப்பட்டு, பின்னர் ’குருவித்துறை’ என்று மருவியதாக கருதப்படுகிறது. மேலும், முற்காலத்தில், அணைக் கட்டுவதற்காக இப்பகுதியிலுள்ள குன்றுகளில் கல் உடைக்கப்பட்டதால் ’குருவிக் கல்லுடைப்பு’ என்ற பழம் பெயரும் இவ்விடத்திற்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

2868


ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
பள்ளர், பறையர், கோனார், சேர்வை, வெள்ளாளர், பிள்ளைமார்.
ஊர் வரலாறு

பொது ஆண்டு 11ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதி குலசேகரமங்கலம் என்றும், சக்கரதீர்த்தம் என்றும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்ததாக தெரிகிறது. பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டின் தொடகத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் சடையவர்மன் ஸ்ரீ வல்லபன் (பொ.ஆ.1101- 1124) இவ்விரு பகுதிகளையும் இணைத்து, அதற்கு ஸ்ரீவல்லபபுரம் என்று பெயரிட்டார். இவ்வூரில் பொது ஆண்டு 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் ஒரு பழமையான பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தற்போது சித்திர ரதவல்லப பெருமாள் என்று அழைக்கப்படும் இக்கோயில், பாண்டியர் காலத்தில் (பொது ஆண்டு 12 ஆம் நூற்றாண்டு) திருசக்கர தீர்த்தது நின்றருளிய பரமசுவாமிகள் என்று அழைக்கப்பட்டிருந்தது இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. மேலும் சுமார் பொது ஆண்டு 11- 12 ஆம் நூற்றாண்டளவில், இப்பகுதி பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த ஊராக இருந்துள்ளது இக்கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது.

கூடுதல் விவரங்கள்

சோழவந்தான் என்ற ஊருக்கு எதிர் கரையில் அமைந்துள்ள தென்கரை கிராமத்திற்கு மேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் குருவித்துறை என்ற இந்த ஊர் அமைந்துள்ளது. இது அயன் குருவித்துறை என்றும் கோவில் குருவித்துறை என்றும் இருந்து பகுதிகளாக உள்ளது. பராக்கிரம பாண்டியன் (பொது ஆண்டு 1097 - 1104) என்ற மன்னன் குருவித்துறையில் உள்ள தடுப்பு அணையைப் புதுப்பித்து, கல் கட்டுமானமாக மாற்றினார் என்ற செய்தி சித்திர ரதவல்லப பெருமாள் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

தகவல்

முனைவர் மகாலிங்கம்

குறிப்புகள்

மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 154. Catalogue of Archaeological Sites Vol.1, page 300.

கேட்பொலி

P.பிரியதர்ஷினி