Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பாலவநத்தம் ஊர் வரலாறு

History of Palavanatham

ஊரின் வரலாற்றுப் பெயர்

புங்க நாட்டு காஞ்சி மற்றும் சிவபாத சேகர நல்லூர்


பெயர்க் காரணம்

இன்று ‘பாலவநத்தம்’ என்றழைக்கப்படும் இக்கிராமம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்கது. கல்வெட்டுகளில் இவ்வூர் ’புங்க நாட்டு காஞ்சி’ என்றும், ’புங்க நாட்டுச் சென்னல் குடி’ என்றும், ’சிவபாத சேகர நல்லூர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கைலாசநாதர் கோயில் என்னும் சிவாலயம் அமைந்துள்ளதால் இவ்வூர் ’காஞ்சி’ என அழைக்கப்பட்டுள்ளது. மேலும், 'சிவதிவபாத சேகரன்' என்பது இராசராசனின் சிறப்புப் பெயர்களில் ஓன்றாகும்.


வீடுகளின் எண்ணிக்கை

1400


ஊர்

பாலவநத்தம்

மாவட்டம்

விருதுநகர்

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
5
ஊர் வரலாறு

இவ்வூரில் கைலாசநாதர் கோயில் மற்றும் செல்லியம்மன் கோயில் என்ற இரு பழமையான கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் குலசேகரன் ஆகிய அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. செல்லியம்மன் கோயிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டு ’சென்னெல் குடியான சிவபாதசேகர நல்லூரைச் சேர்ந்த ஊரார்’ புரவரீசுவரமுடைய நாயனார்க்கு ஊரிலிருந்து வரும் வருவாயைத் தானமாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூர் கல்வெட்டுகளையும் ஊரின் வடக்கு பகுதியில் காணப்படும் தீர்த்தங்கரர் சிற்பத்தையும் வைத்து பார்க்கும் போது, பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டு இராசராசன் காலத்திற்கு முன்பே இவ்வூர் செழிப்புற்று விளங்கியுள்ளாது புலனாகிறது.

கூடுதல் விவரங்கள்

மதுரையில் நான்காம் தமிழ் சங்கத்தை நிறுவி, அச்சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றிய வள்ளல் பாண்டித்துரை தேவர், பொது ஆண்டு 1867 ஆம் ஆண்டு பாலவநத்தம் என்ற இந்த ஊரில் பிறந்தவர். இவர் தமிழிலக்கியச் செயல்பாடுகளுக்கு நிதியளித்தவர், அறிஞர்களை ஆதரித்து இலக்கியச் செயல்பாடுகளை அமைப்பு சார்ந்து ஒருங்கிணைத்தவர். மதுரை மாநகரில் தமிழ்ச்சங்கம் கூட்டியும், அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், ’செந்தமிழ்’ என்னும் வாசக இதழை வெளியிட்டும், பல்வகைத் தமிழ்த் தொண்டினைத் திறம்படச் செய்த செந்தமிழ் ஆர்வலரும் இவரே.

தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

முனைவர் சி. செல்லப்பாண்டியன்

காணொலி

முனைவர் சி. செல்லப்பாண்டியன்