ஊரின் வரலாற்றுப் பெயர்
தமிழ்ப்பாடி
பெயர்க் காரணம்
இவ்வூரின் பெயர்க் காரணம் குறித்து இவ்வூர் மக்களிடையே இரண்டு விதமான செவி வழிக் கதைகள் நிலவுகின்றன. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வாய் பேச முடியாத பாண்டிய மன்னன் ஒருவர் திருச்சுழி அருகே உள்ள குண்டாற்றங்கரையில் குளித்து, திருச்சுழி திருமேனிநாதர் ஆலயத்தில் வணங்கிவிட்டு இவ்வூரைத் தாண்டும்போது அவர்க்கு வாய் பேசும் சக்தி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அவர் ஒரு தமிழ்ப் பாடலை பாடினாரென்றும், இதனால் இவ்வூர் 'தமிழ்ப்பாடி’ என்று அழைக்கப்படுகிறது என்றும் இவ்வூர் மக்களிடையே கருத்து நிலவுகிறது. அந்த மன்னன் குலசேகர பாண்டியனாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மற்றொரு கதையில் தமிழ்ப் புலமை மிக்க புலவர் ஒருவர் இந்த ஊரின் வழியாகச் செல்லும்போது தனது தமிழ்ப் புலமையால் ஒரு தமிழ்ப் பாடலைப் பாடிச் சென்றாராம். அதனால் இந்த ஊருக்குத் தமிழ்ப்பாடி என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.
வீடுகளின் எண்ணிக்கை
280
ஊர்
தமிழ்ப்பாடி
மாவட்டம்
விருதுநகர்